கோவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் சர்வதேச விமான சேவைகளுக்குத் தடை விதித்தன. இந்தியாவும் மார்ச் இறுதி வாரம் முதல் சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை விதித்தது. வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டுவர இயக்கப்படும் சிறப்பு விமானங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது.
இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை 200 சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துவந்துள்ளதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு 111 சிறப்பு விமானங்களை இயக்கியுள்ளோம். இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அதேபோல சவூதி அரேபியா, ஓமன், கத்தார், லெபனான், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் சுமார் 50 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.