தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி- ஹைதராபாத் விமான சேவை மீண்டும் தொடக்கம் - புதுச்சேரி- ஹைதராபாத் விமான சேவை செய்திகள்

புதுச்சேரி: தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதுச்சேரி-ஹைதராபாத் விமான சேவை இம்மாதம் 25 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது.

spicejet resumes Puducherry-Hyderabad flight service

By

Published : Sep 10, 2019, 11:12 AM IST

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் சார்பில் புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத் மற்றும் பெங்களூருவிற்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்த விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஹைதராபாத்திற்கு இயக்கப்படும் விமான சேவை திடீரென நிறுத்தப்பட்டது. மேலும் பெங்களூருவிற்கு செவ்வாய், சனிக்கிழமைகளில் மட்டும் விமானங்கள் செல்வது நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது, பாண்டிச்சேரியிலிருந்து, மீண்டும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை இம்மாதம் 25ஆம் தேதி முதல் ஹைதராபாத்திற்கு இயக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தினசரி காலை 11. 20 மணிக்கு புதுச்சேரிக்கு வரும் இந்த விமானம் காலை 11.40 மணிக்கு ஹைதராபாத்துக்கு புறப்பட்டு செல்லவிருக்கிறது.

இதற்கான நுழைவுச்சீட்டின் விற்பனையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த வாரம் முதலே தொடங்கியுள்ளது.


For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details