கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்பைஸ்ஜெட் விமானி ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவர் கடந்த 21ஆம் தேதி சென்னையிலிருந்து டெல்லிக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தை இயக்கியதாகவும், இவர் தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைபடுத்தியுள்ளதாகவும், இவருடன் தொடர்பிலிருந்த அனைத்து ஊழியர்களும் 14 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.