தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

15 டன் மருந்துப் பொருள்களை ரஷ்யாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டன - மருந்துப் பொருட்கள்

டெல்லி: ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அதன் சரக்கு விமானம் மூலம் மருந்துப் பொருள்களை முதல் முறையாக ரஷ்யாவிற்கு அனுப்பிவைத்தது.

spicejet-operates-maiden-cargo-flight-to-russia-carrying-medical-supplies
ஸ்பைஸ்ஜெட்

By

Published : Jun 11, 2020, 12:10 AM IST

ஹைதராபாத்திலிருந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சரக்கு விமானம் மூலம் 15 டன் மருந்துப் பொருள்களை ரஷ்யாவிற்கு அனுப்பிவைத்தது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அதன் போயிங் 737 விமானம் மூலம் ஏற்றி அனுப்பப்பட்ட மருந்துப் பொருள்கள் இன்று மதியம் 12 மணிக்கு டொமொதேடொவோ விமான நிலையத்தைச் சென்றடைந்தது.

இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இதுவரை 35 வெளிநாடுகளுக்கு தங்கள் சரக்கு சேவையை அளித்துவருகிறுது. மேலும் 2,200 சரக்கு விமானங்களை இயக்கியுள்ளது. கடந்த பத்து நாள்களில் மட்டும் ரஷ்யா உள்பட ஆறு புதிய வெளிநாடுகளை பட்டியலில் சேர்த்துள்ளது.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இதுவரை அபுதாபி, துபாய், சிங்கப்பூர், குவைத், மியான்மர், கம்போடியா, கோலாலம்பூர், ஹாங்காங் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சரக்கு விமானங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:துபாயிலிருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details