மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாகூர், சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்கு புகழ் பெற்றவர். இவர் விமானத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் என்று தற்போது புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை பிரக்யா சிங் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில், “தாம் விமானத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவில்லை எனவும், தன்னை விமான ஊழியர்கள் சரியாக நடத்தவில்லை. அதற்கு நான் ஆட்சேபம் தெரிவித்தேன்” எனவும் கூறியுள்ளார்.
விமானத்தில் பிரக்யா சிங் தாகூர் தர்ணா? - பிரக்யா சிங் தாகூர் தர்ணா
டெல்லி: சர்ச்சைக்குரிய பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர், விமானத்தில் தர்ணா நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
SpiceJet faces Pragya Thakur's ire over 'ill treatment'
இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் அனிர் விக்ரம் கூறுகையில், “விமானத்துக்குள் சீட் ஒதுக்கீடு குறித்து எனக்கு புகார் கிடைத்துள்ளது. அந்த புகாரின் மீது நாளை (டிச.23) விசாரணை நடத்தப்படும்” என்றார்.
இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ்-பாஜகவின் இதயம் ஒன்றுதான்' - ராகுல் சாடல்