அமெரிக்காவிற்கு விமானங்களை இயக்க " இந்தியன் ஷெட்யூல்ட் கேரியர்" என்று பெயரிடப்பட்டுள்ளதாக பட்ஜெட் கேரியர் ஸ்பைஸ்ஜெட் இன்று (ஜூலை 23) தெரிவித்துள்ளது. தற்போது, தேசிய விமான சேவையான ஏர் இந்தியா மட்டுமே இந்தியா-அமெரிக்க வழித்தடங்களில் விமானங்களை இயக்குகிறது.
இந்நிலையில் தெளிவான அறிக்கை தாக்கல் செய்ததில், ஸ்பைஸ்ஜெட் இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்துக்கொள்ளப்பட்ட சேவைகளின் அடிப்படையில் இவை இயங்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான விமான சேவைகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இது செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக வணிக விமான சேவைகள் அனைத்தும் கடந்த மார்ச் 22ஆம் தேதியிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டன.
ஸ்பைஸ் ஜெட் தலைவரும் நிர்வாக இயக்குனருமான அஜய் சிங் கூறுகையில், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இந்தியன் ஷெட்யூல்ட் கேரியர் உருவாக்கப்படுவது விமானப் போக்குவரத்தில் சர்வதேச விரிவாக்கத்தை உருவாக்கும் அளவிற்கு சிறப்பான திட்டமாகும்.
"ஒவ்வொரு துன்பத்திலும் ஒவ்வொரு வாய்ப்புள்ளது" என்பதை நான் எப்போதும் நம்புவேன். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஸ்பைஸ் ஜெட்டிற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதை நான் பெரும் வாய்ப்பாக எண்ணுகிறேன் என்றார்.