தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவில் கை கோர்க்கும் பங்காளிகள்? நகம் கடிக்கும் பாஜக! - குமாரசாமி

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே மீண்டும் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக யூகங்கள் வெளியாகிவருகிறது.

Cong-JD(S)  Karnataka politics  Politics News  H D Kumaraswamy  Karnataka Rajya Sabha elections  Rajeev Gowda  B K Hariprasad  D Kupendra Reddy  கர்நாடகா மாநிலங்களவை தேர்தல்  காங்கிரஸ், ஜே.டி.எஸ். கூட்டணி  மதசார்பற்ற ஜனதா தளம்  பாஜக  எடியூரப்பா  குமாரசாமி  தேவேகவுடா
Cong-JD(S) Karnataka politics Politics News H D Kumaraswamy Karnataka Rajya Sabha elections Rajeev Gowda B K Hariprasad D Kupendra Reddy கர்நாடகா மாநிலங்களவை தேர்தல் காங்கிரஸ், ஜே.டி.எஸ். கூட்டணி மதசார்பற்ற ஜனதா தளம் பாஜக எடியூரப்பா குமாரசாமி தேவேகவுடா

By

Published : Jun 5, 2020, 11:33 PM IST

கர்நாடகா மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸை சேர்ந்த ராஜீவ் கவுடா, பி.கே. ஹரிபிரசாத், பாஜவின் பிரபாகர் கோர் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த குபேந்திரா ஆகியோரின் பதவிக்காலம் ஜூன் 25ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் ஜூன் 19ஆம் தேதியன்று இந்த இடங்களுக்கு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 117 உறுப்பினர்களுடன் (சபாநாயகர் உள்பட) மாநிலத்தில் ஆட்சியிலுள்ள பாஜக நான்கு இடங்களில் இரண்டில் நிச்சய வெற்றியை உறுதி செய்யும். மீதமுள்ள இரு தொகுதிகளில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெல்லும். நான்காவது தொகுதியை வெல்வதில் சிக்கல் நீடிக்கிறது.

காரணம், மாநிலங்களவை வேட்பாளர் வெற்றி பெற குறைந்தபட்சம் 44 வாக்குகள் தேவைப்படுவதால், எந்தவொரு கட்சியும் சுயாதீனமாக நான்காவது இடத்தை வெல்ல முடியாது.

ஆகவே நான்காவது இடத்தை வெல்லும் முயற்சியில் காங்கிரசும், பாஜகவும் காய் நகர்த்துகின்றன. ஏற்கனவே 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியாக விளங்கிய பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரியது.

இந்நிலையில் பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்கும் வகையில், காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்தது. இந்நிலையில் மீண்டும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக யூகங்கள் வெளியாகியுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 34 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். ஆகவே காங்கிரஸ் உறுப்பினர்கள் அவர்களுக்கு ஆதரவளிக்கும்பட்சத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் கிடைப்பார்.

காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் மீண்டும் இணைவது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக மூத்தத் தலைவரும், வருவாய் அமைச்சருமான ஆர். அசோகா, “காங்கிரஸ் ஒருவிதமாக கட்சி. அது தேவேகவுடாவை பிரதமர் பதவியிலிருந்து இறக்கியது. குமாரசாமியை ஏமாற்றியது. மதச்சார்பற்ற ஜனதா தளமும் காங்கிரஸ் பற்றி அறிந்துள்ளது. ஒரு முறை பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்திருந்தது. நாங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறோம். வளர்ச்சியை ஆதரிப்பது மதச்சார்பற்ற ஜனதா தளமாக இருப்பினும் நலம்தான்” என்றார்.

கர்நாடகாவில் மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் வருகிற 9ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையும் படிங்க: காணொலி: வெள்ளை நிற மலைபாம்பை, புடலங்காய் போல் தூக்கிய இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details