இந்தியா முழுவதும் நவராத்திரி, துர்கா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை கடந்த வாரம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று (அக்.20) 392 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில் சேவை நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.
இந்தியா முழுவதும் இன்று முதல் 392 சிறப்பு ரயில்கள் இயக்கம்!
டெல்லி: பண்டிகை காலங்களை ஒட்டி இன்று (அக்.20) முதல் இந்தியா முழுவதும் 392 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
special-trains-will-run-from-today
அதில் புரி - சென்னை சிறப்பு ரயில், விசாகப்பட்டினம் - சென்னை சிறப்பு ரயில், சென்னை - புவனேஷ்வர் சிறப்பு ரயில், ஹைதராபாத்-சென்னை சிறப்பு ரயில், செகந்திராபாத்- திருவனந்தபுரம் இடையே தமிழ்நாடு வழியாக சிறப்பு ரயில், புதுச்சேரி-புவனேஸ்வர் சிறப்பு ரயில் உள்ளிட்டைவை இயக்கப்படுகின்றன.
இதையும் படிங்க:பண்டிகைக் கால கூட்ட நெரிசல் - சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
Last Updated : Oct 20, 2020, 7:16 AM IST