ஊரடங்கு உத்தரவு காரணமாக, புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இயங்கிவரும் செராமிக், சோப் மற்றும் இரும்பு தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த, வடமாநிலத் தொழிலாளர்கள் 360 பேர் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல், கடந்த 50 நாட்களுக்கும் மேலாகத் தவித்து வந்தனர்.
இந்நிலையில் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியிடம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து இன்று பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 360 வடமாநிலத் தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் காரைக்காலில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உத்தரப்பிரதேசத்திற்கு சிறப்பு ரயில்: சொந்த ஊர் செல்லும் வட மாநிலத் தொழிலாளர்கள்! - பாண்டிச்சேரி செய்திகள்
புதுச்சேரி: காரைக்காலில் இருந்து சிறப்பு ரயில் மூலம் 360 வட மாநிலத் தொழிலாளர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ல்வித்துறை அமைச்சர் கமலகண்ணன் சிறப்பு ரயிலை கொடியசைத்து அனுப்பி வைக்கும் காட்சி
முன்னதாக 360 வடமாநிலத்தொழிலாளர்களுக்கும் பிஸ்கட் மற்றும் உணவுகளை வழங்கிய புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணன் சிறப்பு ரயிலை, கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்த சிறப்பு ரயில் ஆனது கடலூர், சென்னை வழியாக உத்தரப்பிரதேச மாநிலம், பூர்ணியா ரயில் நிலையத்திற்கு வரும் 18ஆம் தேதி சென்றடைகிறது.
இதையும் படிங்க:கைவிட்ட அரசு; நடை பயணமாய் புறப்பட்ட குடிபெயர் தொழிலாளர்கள் - நேரில் சந்தித்த ராகுல்