தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 2, 2019, 9:09 PM IST

ETV Bharat / bharat

ஈடிவி பாரத் சிறப்பு வீடியோ பாடல் - காட்சிப்படுத்தி பாராட்டிய இந்தியன் ரயில்வே!

டெல்லி: அண்ணல் காந்தியின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தேசத்தின் தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நமது ஈ டிவி பாரத் ஊடகம் சிறப்பு வீடியோ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த முயற்சியைப் பாராட்டிய இந்திய ரயில்வே, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியின் போது இந்த வீடியோவைக் காட்சியிட்டது.

அண்ணல் காந்தி

அண்ணல் காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தேசத்தின் தந்தை காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நமது ஈ டிவி பாரத் சிறப்பு வீடியோ பாடலை வெளியிட்டது. இந்த வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் ட்வீட்-ல், "பல்வேறு பாடகர்களால் பாடப்பட்ட அண்ணல் காந்தியின் 'வைஷ்ணவ் ஜன தோ' பாடல், காந்தியடிகளின் விருப்பமான பாடல். இந்த பாடல் நாட்டிற்கும் சமூகத்திற்கும் ஒரு வாழ்க்கைப் பாடம்’’ எனப் பதிவிட்டார்.

ஈடிவி பாரத் சிறப்பு வீடியோ பாடலைக் காட்சிப்படுத்தி பாராட்டிய இந்தியன் ரயில்வே

இதுகுறித்து ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "இந்த தேசத்தின் தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம். இது நாடு முழுவதும் செய்யப்பட்டுள்ள பணிகளை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் ஈடிவி பாரத் தயாரித்த சிறப்பு பாடல் வீடியோவை நாங்கள் காட்டியுள்ளோம். இது அண்ணல் காந்திக்கு அஞ்சலி செலுத்துவதோடு இந்தியாவின் கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் ஒரு சிறந்த முயற்சி" எனப் பாராட்டியுள்ளார்.

வடக்கு ரயில்வேயின் சிபிஆர்ஓ தீபக் குமார் பேசுகையில், "நாடு முழுவதும் இருந்து பல்வேறு பாடகர்கள் பாடிய இந்தப் பாடல் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. இந்திய ரயில்வே இந்த முயற்சியை வரவேற்கிறது. எந்தவொரு தனிநபரோ அல்லது அரசு சாரா நிறுவனமோ எடுக்கும் முயற்சிகளை நாங்கள் எப்போதும் ஊக்குவிப்போம்" எனப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ரயில்வே அமைச்சகத்தின் நிகழ்வில் கலந்து கொண்ட ஏராளமான மாணவர்களும் ஈடிவி பாரத் ஊடகத்தின் முயற்சியைப் பாராட்டி, அந்த வீடியோ பாடலை வெவ்வேறு தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் பார்க்கலாமே: காந்தி 150: ஈடிவி பாரத்தின் காந்தி சிறப்புப் பாடல்

ABOUT THE AUTHOR

...view details