ரயில் தண்டவாளங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரில் உருவாகும் கொசு உற்பத்தியை தடுக்க டெல்லி ரயில்வே துறை புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ரயிலில் கொசுக்களை அழிக்கும் பூச்சிக்கொல்லி தெளிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட இந்த டெர்மினேட்டர் ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் பூச்சிக்கொல்லியை தண்டவாளங்களில் தெளிக்கும் பணியை தொடங்கும்.
டெல்லியில் கொசுக்களை அழிக்கும் 'டெர்மினேட்டர் ரயில்' - தயாபஸ்தி, சேவா நகர், லஜ்பத் நகர், ஹஸ்ரத் நிஜாமுதீன், லோதி காலனி
டெல்லி: தண்டவாளங்களில் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க, சிறப்பு ரயில் இயக்கப்படும் என டெல்லி ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
mosquito-terminator-train
நாள்தோறும் காலை 5 மணி முதல் 9 மணி வரை இயக்கவிருக்கும் இந்த ரயில், டெல்லியின் தயாபஸ்தி, சேவா நகர், லஜ்பத் நகர், ஹஸ்ரத் நிஜாமுதீன், லோதி காலனி மற்றும் அருகிலுள்ள பகுதிகளை கடந்து செல்லும்.
இந்த டெர்மினேட்டர் ரயில் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை இயக்கப்படும் என டெல்லி ரயில்வே துறை தெரிவித்துள்ளது.