கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கோயில்களில் உள்ள யானைகள் அனைத்தும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
அந்தவகையில் புதுச்சேரி மாநில மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி, வேதபுரீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தின் பின்புறம் உள்ள கொட்டகையில் தங்க வைக்கப்பட்டுள்ளது. அங்கு யானை காலை, மாலை என்று வழக்கம்போல் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் யானைக்கு உணவு தயாரிப்பதற்கு முன்பாக பாகன் கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும் என்றும்; கையுறை, முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் யானைக்கு உணவு கொடுக்கும் பாகன்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அக்னி வெயில் காரணமாக, லட்சுமி யானை ஆனந்தக் குளியல் போட, கோயில் நிர்வாகம் இவ்வாறான சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:புதுவையில் 13 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை!