இந்தியாவுக்கு வெளியே பணம் அனுப்புவது தொடர்பாக தனிநபர்கள் அல்லது இந்து பிரிவினை ஆகாத குடும்பங்கள் (HUF) மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளைப் பாதிக்கும் சில திருத்தங்களை பட்ஜெட் முன்மொழிந்துள்ளது.
தங்களின் குழந்தைகளுக்கான கல்வி, தங்குமிட கட்டணங்களுக்காகப் பணம் அனுப்பத் திட்டமிடும்போது, சட்டத்தின்கீழ் வரித் தளத்தை விரிவுபடுத்தும் மூலத்தில் வசூலிக்கப்பட்ட வரி என்னும் டி.சி.எஸ். (TCS- Tax Collected at Source) உடன் இணங்க வேண்டியது அவசியம் என்பதால் பட்ஜெட், மாணவர்கள், அவர்களின் பெற்றோருக்கு ஒரு வேதனையான விஷயத்தை முன்வைத்துள்ளது.
நிச்சயமாக இதைப் பின்பற்றுவது பெரும்பாலான பெற்றோர்களுக்குச் சிக்கலானது. மேலும் ஒவ்வொரு முறையும் குழந்தைகளுக்கு அமெரிக்க டாலர்கள் அல்லது யூரோ நாணயங்களின் ரூபாய்க்கு ஈடான மதிப்பு மிக அதிகமாக இருக்கும்போது பணத்தை அனுப்ப அவர்கள் ஒவ்வொரு முறையும் நிதிக்களங்களைத் தேடுவதால் அவர்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அதன் விளைவுகளையும் பணப்புழக்கத்தின் மீதான தாக்கத்தையும் கூடுதலாக ஆராய்வோம்.
சட்டத்தில் 206சி பிரிவின் திருத்தத்தின்படி, நாணய விற்பனையாளர் (அங்கீகரிக்கப்பட்ட வியாபாரி) இந்தியாவுக்கு வெளியே அனுப்பப்பட வேண்டிய எஃப்.சி.யின் மதிப்புக்கு (ஒரு நிதியாண்டில் மொத்தத் தொகை ஏழு லட்சம் ரூபாயைத் தாண்டவில்லையெனில்) கூடுதலாக 5 விழுக்காடு வசூலிப்பார்.
வேறு சொற்களில் கூறுவதனால், தொகையை வாங்குபவர் எல்.ஆர்.எஸ்.இன் (தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டம்) கீழ் கல்வி அல்லது ரிசர்வ் வங்கியின் எல்.ஆர்.எஸ். கொள்கையின்கீழ் அனுமதிக்கப்பட்ட வேறு எந்த நோக்கங்களுக்காக வெளியில் அனுப்பப்படும் நாணயத்தின் மதிப்பில் 5 விழுக்காடு கூடுதல் தொகையை செலுத்த வேண்டும்.
இந்த எல்.ஆர்.எஸ்.இன் கீழ் ஒரு நபர் ஒரு நிதியாண்டில் பயணம், மருத்துவச் சிகிச்சை, கல்வி, பரிசுகள், நன்கொடைகள் வகையில் நெருங்கிய உறவினர்களின் பராமரிப்புச் செலவினங்களைச் சந்திப்பதற்காக இரண்டு லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் வரை அனுப்ப அனுமதிக்கப்படுகிறார். மேலே கூறப்பட்ட தொகையைப் பெறுபவர்கள் வெளிநாடுகளில் உள்ள பங்குகள், கடன் பத்திரங்கள், அசையா சொத்துகளில் முதலீடு செய்யலாம்.
இந்த டி.சி.எஸ்.இன் விளைவாக ரூ.7 லட்சத்துக்கு மேல் அனுப்பும் பணத்திற்கு 5 விழுக்காடு (டாலர் ஒன்றுக்கு ரூ.71.50 என கணக்கிடப்பட்டால் இது ஏறக்குறைய 9,790 டாலருக்குச் சமமாகும்). எல்.ஆர்.எஸ். பெரும் தொகையை அனுமதித்தாலும், அறிமுகப்படுத்தப்பட்ட டி.சி.எஸ். இதுபோன்று உபரியாகப் பணம் அனுப்புவதை நிச்சயமாகச் சரிபார்க்கும், ஏனெனில் ஒவ்வொரு பணமும் ஒரு நிதியாண்டில் மொத்தமாக ரூ.7 லட்சத்துக்கு மேல் செலுத்தப்படும் ஒவ்வொரு தொகைக்கும் இந்த டி.சி.எஸ். 5 விழுக்காடு வரி வசூலிக்கப்படுகிறது.
ஒரு நபர் ஒரு நிதியாண்டில் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களைச் சொந்த பணம் அல்லது வங்கியிலிருந்து கடன் வாங்கிய தொகை மூலம் அனுப்ப வேண்டும் என்று கருதினால், அந்த நபர் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறையின் கீழ் ஐந்தாயிரம் அமெரிக்க டாலர் கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டும்.
இது நிச்சயமாக வலிதரக்கூடிய அளவு. எவ்வாறாயினும், வருமான வரிச்சட்ட விதிகளின்கீழ் அந்த நபர் தனது மொத்த வருமானத்தை அறிவிக்கும்போது மேலே கூறப்பட்டபடி டி.சி.எஸ்.இன் கீழ் செலுத்தப்பட்ட கடன் தொகை உபரி அனுமதிக்கப்படுவதால் முன்கூட்டியே செலுத்தும் வரி அளவு குறைகிறது.