மகாராஷ்டிரா மாநிலம், மும்பை ஐஐடி கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கலந்துகொண்டார்
'பேசும் கணினி சமஸ்கிருத மொழியால் மட்டுமே சாத்தியம்' - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்
மும்பை: எதிர்காலத்தில் பேசும் கணினி உருவாக்கப்பட்டால் அது சமஸ்கிருத மொழியின் பங்களிப்பால் மட்டுமே சாத்தியமாகும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
!['பேசும் கணினி சமஸ்கிருத மொழியால் மட்டுமே சாத்தியம்'](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4118021-thumbnail-3x2-pokku.jpg)
மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்
இதில் பேசிய அவர், "சமஸ்கிருதம் ஓர் அறிவியல் மொழியாகும், இம்மொழியில் மட்டும்தான் பேசும் நடையிலே எழுதவும் முடியும். அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா வருங்காலத்தில் பேசும் கணினியை உருவாக்கும் என்றால், அது சமஸ்கிருத மொழியின் பங்களிப்பின் மூலம்தான் சாத்தியப்படும், இதை நாசாவும் ஒப்புக் கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.