தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங்கிரஸ் எம்எல்ஏவை தகுதிநீக்கம் செய்யக்கோரி அரசு கொறடா மனு - காங்கிரஸ் எம்எல்ஏ-வை தகுதி நீக்கம் செய்யக்கோரி அரசு கொறடா மனு

புதுச்சேரி: காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு மீது அரசு கொறடா அளித்த மனுவின் அடிப்படையில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்.

Speaker Sivakasundanu said legal action would be taken on the petition filed by the government
அரசு கொறடா அளித்த மனு மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்

By

Published : Jan 31, 2020, 7:17 AM IST


புதுச்சேரி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலுவைத் தகுதிநீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் அரசு கொறடா அனந்தராமன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு தவறான கருத்தைக் கூறிவருகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் மனு அளித்தனர்.

இதுவரை இரண்டு முறை அரசு கொறடா சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது மனு அளிக்கப்பட்டுள்ளது. மனு தொடர்பாக சட்டத்துக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

சபாநாயகர் சிவக்கொழுந்து பேட்டி

அரசு கொறடா அனந்தராமன், காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் மனு அளித்துள்ளனர்

இதையும் படிங்க:

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: செங்கோட்டையனை நேரில் சந்தித்து மா. கம்யூ மனு

ABOUT THE AUTHOR

...view details