உத்தரப் பிரதேசம் மாநிலம் அமேதி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார். இந்நிலையில், இவரது மனைவி புதிதாக கட்டிய வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தார்.
அமேதி நகர் எஸ்.பி. மனைவி கொலை! திருடர்கள் வெறிச்செயல் - murder
லக்னோ: அமேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமாரின் மனைவியை, சாலை கட்டுமான பொருட்கள் திருடவந்தவர்கள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது வீட்டிற்கு வெளியே காலியாக உள்ள ஒரு இடத்தில் வைத்திருந்த ஒப்பந்ததாரர் ஒருவரின் சாலை கட்டுமான பொருட்களை திருடுவதற்கு சிலர் வந்தபோது ராஜேஷ் குமாரின் மனைவி கூச்சலிட ஆரம்பித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த திருடர்கள் அவரை பலமாகத் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடையே விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. மேலும் காவல் ஆய்வாளரின் மனைவி திருடர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.