மிர்சாபூர் (உத்தரப் பிரதேசம்): கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஆண்மைக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு அனுமதியளித்திருந்தது. இதுகுறித்து பல தரப்பிலிருந்து, பல விதமான கருத்துக்கள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.
இச்சூழலில் மத்திய அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, ஆகையால் பாஜக அரசு அளிக்கும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள மாட்டோம் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இரண்டு மனைவி இலவசம் - திமுகவை சீண்டிய சி.வி.சண்முகம்!
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இது தொடர்பாக பேசும்போது, “பா.ஜ.க. அரசு நம்பிக்கைக்குரியது அல்ல என்பதால் நான் கரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக்கொள்ள மாட்டேன். இந்த நேரத்தில் கோவிட்-19 தடுப்பூசியை எடுத்துக் கொள்ள மாட்டேன். அதிலும், பாஜக அரசின் தடுப்பூசியை என்னால் எப்படி நம்ப முடியும். வாய்ப்பே இல்லை?. எனது அரசு ஆட்சி அமைக்கும்போது எல்லோரும் இலவசமாக தடுப்பூசியை பெறுவார்கள்” என்று தெரிவித்தார்.
தலைவர் அகிலேஷ் யாதவை காட்டிலும் அவரது கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் ஒரு படி மேலே போய் தடுப்பூசி போட்டு கொண்டால் ஒரு நபரை ஆண்மையற்றவராக மாற்றி விடக்கூடும் என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்தியாவில் 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு
சமாஜ்வாடியின் அசுதோஷ் சின்ஹா கூறும்போது, “அகிலேஷ் யாதவ் இதை சொல்லியிருந்தால் தீவிரமான ஒன்றாக இருக்கும். அரசாங்கத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. இது தீங்கு விளைவிக்கும். மக்களை கொல்ல அல்லது குறைக்க இந்த தடுப்பூசி வழங்கப்பட்டதாக நாளை மக்கள் கூறுவார்கள். நீங்கள் ஆண்மையற்றவராக ஆகலாம் அல்லது எதுவும் நடக்கலாம். அகிலேஷ் யாதவ் இதை சொல்லியுள்ளதால் மாநிலத்தில் யாரும் தடுப்பூசி போட்டு கொள்ளக்கூடாது என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.