தென்மேற்கு ரயில்வே மண்டலம் 13 ரயில் நிலையங்களில் நடைமேடை சீட்டின் விலையை ரூ.10 லிருந்து ரூ.50 ஆக உயர்த்தியுள்ளது. இது ரயில்வே நிலையத்தில் மக்களின் கூட்டத்தை தடுப்பதற்காகவும், அதிகப்படியான பயணத்தை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சியாகும். அதேசமயம் வரும் திருவிழாக் காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
13 ரயில்நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் உயர்வு! - பெங்களூரு
பெங்களூரு: தென்மேற்கு ரயில்வே மண்டலம் 13 ரயில் நிலையங்களில் நடைமேடை சீட்டின் விலையை உயர்த்தியுள்ளது.
டிக்கெட் உயர்வு
இந்நிலையில், கிருஷ்ணராஜபுரம், பங்கர்பேட்டை, தும்கூர், ஓசூரு, தருமபுரி, கெங்கேரி, மண்டியா, இந்துபூர், பெனுகொண்டா, யெலஹங்கா, பனஸ்வாடி, கார்மேலாரம், வைட்ஃபீல்ட் ஆகிய 13 இடங்களில் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கட்டண உயர்வானது வரும் நவம்பர் 10ஆம் தேதிமுதல் அமலுக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க: பண்டிகை காலத்தில் 200 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம் - ரயில்வே துறை!