பல்வேறு நாடுகளை தழுவி எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பு சட்டமாகும். 10 நாடுகளின் அரசியலமைப்பு சட்டத்திலிருந்து சிறந்த அம்சங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நம் சட்டத்தில் சேர்த்துக்கொண்டோம்.
பிரிட்டன்:
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தாயாக பிரிட்டன் அரசியலமைப்பு சட்டம் திகழ்கிறது. நாடாளுமன்றம், ஒற்றை குடியுரிமை, அமைச்சரவை, நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள், நாடாளுமன்ற இரு அவை முறை, சபாநாயகர் போன்ற அம்சங்களை பிரிட்டன் நாட்டை தழுவியே இந்தியா பின்பற்றிவருகிறது.
அயர்லாந்து:
கூட்டாட்சி தத்துவம், குடியரசுத் தலைவர் தேர்தல், மாநிலங்களவை நியமன உறுப்பனர்கள் தேர்வு போன்றவற்றை அயர்லாந்து நாட்டிலிருந்து பின்பற்றுவருகிறோம்.
அமெரிக்கா:
குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோரின் கடமைகள், பொறுப்புகள், குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை பதவி நீக்கம் செய்வது, அடிப்படை உரிமைகள், அதிகார பகிர்வு, மறு சீராய்வு மனு, நீதிமன்றத்தின் தன்னாட்சி அதிகாரம், இந்திய அரசியலமைப்பு முகவுரை ஆகியவற்றை அமெரிக்க அரசியலமைப்பிலிருந்து பின்பற்றுகிறோம்.
கனடா:
வலுவான மத்திய அரசு, மத்திய, மாநில அரசுகளிடையே அதிகாரங்களை பகிர்ந்தளித்தல், மத்திய அரசின் எஞ்சிய அதிகாரங்கள், ஆளுநர்களை தேர்ந்தெடுக்கும் முறை, உச்ச நீதிமன்றத்தின் வரம்புகள் போன்றவற்றை கனடா சட்டத்திலிருந்து பின்பற்றுகிறோம்.