தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘இந்தியாவின் குரல்கள்’: கூகுளின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தளம் மூலம் ஒலித்த ‘ஜன கன மன’ - Google Research India

சுதந்திர தினத்தில் இந்தியாவை ஒன்றிணைக்கும் உலகின் மிகப்பெரிய தேசிய கீதத்தை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார் பரத் பாலா. பரத் பாலா, விர்ச்சுவல் பாரத் இணைந்த உருவாக்கத்தில் கூகுள் வழங்கும் இப்பாடல் ஒரு பிரசார் பாரதியின் முன்னெடுப்பாகும்.

Sounds of India
Sounds of India

By

Published : Aug 20, 2020, 3:09 AM IST

டெல்லி: இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினத்தன்று அருணாச்சல பிரதேசத்தின் மலைகள் முதல் தார் பாலைவனம் வரை இந்தியர்களின் குரல்கள் ஒன்றிணைந்த ஒரு முக்கிய நிகழ்வு அரங்கேறியது.

கூகுள் செயற்கை நுண்ணறிவு மூலம் சேகரிக்கப்பட்ட குரல்கள், பரத்பாலா மற்றும் அவருடைய விர்ச்சுவல் பாரத் குழுவினரால் மீளுருவாக்கம் செய்யப்பட்ட 'ஜன கன மன' பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரசார் பாரதி, கூகுள், விர்ச்சுவல் பாரத் ஆகியோரின் தனித்துவமான கூட்டுமுயற்சியின் மூலம், இயக்குநர் பரத்பாலா, அவருடைய விர்ச்சுவல் பாரத் குழுவினரால் படமாக்கப்பட்ட தேசிய கீதத்தை செயற்கை நுண்ணறிவு இசை அனுபவத்துடன் பாட இந்தியா அழைக்கப்பட்டது.

இந்தியாவின் குரல்கள்

இந்தியாவை மெய்நிகர் முறையில் ஒன்றிணைத்து, இந்தியர்களை நம் கலாசாரம் குறித்த குறும்படங்கள் மூலம் டிஜிட்டல் முறையில் ஒரே இடத்தில் இணைப்பதே என்னுடைய யோசனையின் நோக்கம். எனவே இது எல்லா காரணிகளின் இயல்பான, சரியான கலவையாக இருந்தது.

இந்தியாவின் குரல்கள்

மேலும் முதன்முறையாக ஒரு தனித்துவமான செயற்கை நுண்ணறிவு இசை அனுபவத்தில் குரல்களை ஒன்றிணைப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது என்று இதன் இயக்குநர் பரத் பாலா தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details