தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் முதல் நபராக குடியேற்றச் சான்றிதழ் பெற்ற சிறுமி! - union territory

ஶ்ரீநகர் : 370ஆவது சட்டப் பிரிவை மத்திய அரசு நீக்கியதைத் தொடர்ந்து, குடியுரிமைச் சான்றிதழ் பெறும் நடைமுறையை வகுத்து மத்திய அரசு வெளியிட்ட நிலையில், ஜம்மு காஷ்மீரின் முதல் குடியேற்றச் சான்றிதழ் பெற்ற நபர் என்ற பெருமையை 10 வயதான ஆலியா தாரிக் எனும் சிறுமி பெற்றுள்ளார்.

ஜம்மு சிறுமி
ஜம்மு சிறுமி

By

Published : Jul 3, 2020, 3:49 PM IST

ஜம்மு - காஷ்மீர், பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த ஆலியா தாரிக் எனும் பத்து வயது சிறுமி அம்மாநிலத்தில் முதன்முதலாக குடியுரிமைச் சான்றிதழ் பெரும் நபர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

மத்திய அரசு 370ஆவது சட்டப் பிரிவை ஜம்மு காஷ்மீரிலிருந்து அகற்றியதை அடுத்து அங்கு குடியேறவும், நிலம் வாங்கவும் வெளியாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், மக்கள் குடியுரிமைச் சான்றிதழ் பெறவும் அரசு புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.

இது குறித்து ஆலியா தாரிக்கின் தந்தை கூறுகையில், “வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்தச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பிக்கப்பட்டிருந்த நிலையில், முதலில் ஆலியாவுக்கு சான்றிதழ் கிடைத்து விட்டது. 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியதற்குப் பிறகு இச்சான்றிதழ் அவசியமாகும். இதனை என் உறவினர்களுக்கும் பரிந்துரைப்பேன். ஆதார் அட்டையைப் போலவே இதுவும் குடிமக்களுக்கு முக்கியம்” என்றார்.

ஜம்மு காஷ்மீரின் குடியேற்றச் சான்றிதழ்களுக்காக 33,157 விண்ணப்பங்களை இதுவரை அரசாங்கம் பெற்றுள்ளதாகவும், அவற்றில் 25,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜம்மு பிரிவின் கீழுள்ள 10 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 32,000 விண்ணப்பங்களை அரசு பெற்றுள்ளதாகவும், காஷ்மீர் பிரிவின் கீழ் 720 விண்ணப்பங்களை மட்டுமே பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details