தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய அரசு வெளியீடு! - பள்ளிகள் திறக்கும் தேதி

அக்டோபர் 15ஆம் தேதி முதல் பள்ளிகளை, சூழல் ஏதுவாக இருந்தால் திறந்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

SOP for school released
SOP for school released

By

Published : Oct 5, 2020, 10:24 PM IST

டெல்லி: அக்டோபர் 15ஆம் தேதி முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க, வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வுகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு அக். 15 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. இது குறித்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் முடிவு செய்துகொள்ளலாம் எனவும் அறிவிப்பில் தெரிவித்திருந்தது.

இத்தருணத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்:

  • பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் முழுமையாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • மாணவர்களுக்கு ஏற்ற வகையில் உடல்நலம் பாதிக்கப்படும் நிலையில் விடுமுறை வழங்க வேண்டும். வீட்டிலிருந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்.
  • மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும்
  • மாணவர் வருகைப் பதிவேட்டில் நெகிழ்வுத் தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும்
  • இணையவழி வகுப்புகள் தேவையெனில் அதனை மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
  • பள்ளிகளில் தகுந்த இடைவெளி அவசியம்
  • எல்லா நேரங்களிலும், ஆசிரியர்களும், அனைத்து மாணவர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முக்கியமாக பள்ளிகளில் சந்திப்பு நடக்கும்போது, நூலகத்தில் சந்தித்துக் கொள்ளும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்
  • கரோனா பாதுகாப்பு வழிமுறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தகுந்த இடைவெளி குறித்த பலகைகள், பேனர்களை பள்ளிகளில் வைக்க வேண்டும்.
  • என்.சி.இ.ஆர்.டி. சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள, மாற்றுக் கல்வி அட்டவணையைப் பின்பற்றி, முழுக் கல்வி ஆண்டுக்கும், விரிவான கல்வி அட்டவணையைப் பள்ளிகள் உருவாக்க வேண்டும்.
  • பள்ளிகளில் அவசரகால உதவிக் குழு, சுகாதாரப் பரிசோதனைக் குழு உருவாக்கப்பட வேண்டும்.
  • அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் வழிகாட்டல்களைப் பின்பற்றிச் சொந்தமாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
  • கரோனா காலத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க, சூடாகச் சமைக்கப்பட்ட மதிய உணவு அல்லது அதற்கு ஈடான ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.
  • பள்ளிகளை அக்டோபர் 15ஆம் தேதி திறக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. ஆன்லைன் வகுப்புகளை ஊக்குவிக்க வேண்டும் போன்ற நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

மேலும், பள்ளியில் கரோனா தொற்று கண்டறியப்பட்டால், ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details