தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் நினைவு அஞ்சல் தலை விரைவில் வெளியீடு! - அஞ்சல் தலை

முன்னாள் பிரதமர் பி.வி நரசிம்மராவ்வின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விரைவில் நினைவு அஞ்சல் தலை வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

நரசிம்ம ராவ்
நரசிம்ம ராவ்

By

Published : Jul 3, 2020, 8:15 AM IST

ஹைதராபாத்: முன்னாள் பிரதமர் பி.வி நரசிம்மராவ்வின் 100ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு அஞ்சல் தலை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடியும், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத்தும், பிவி நரசிம்மராவுக்கு அஞ்சல் தலை வெளியிடுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர்” என ரெட்டி தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் தான் இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் வைத்துள்ளார். அவரின் கோரிக்கை தற்போது ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது.

இந்திய பொருளாதார சீர்திருத்தத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், தென்னிந்தியாவில் இருந்து (ஒன்றுபட்ட ஆந்திரம்) பிரதமரான முதல் தலைவர் என்ற பெருமைக்கு உரியவராவார்.

1991ஆம் ஆண்டு பிரதமராக இருந்தபோது, அவர் தொடங்கிவைத்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளைத்தான், பின்னர் வந்த அரசுகளும் பின்பற்றின. பிரதமராவதற்கு முன்பு ஆந்திர முதலமைச்சராகவும், மத்திய அரசில் பாதுகாப்பு, உள்துறை, வெளியுறவு அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

இவர் 1921ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி பிறந்தார், இவரின் பிறந்த தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது நினைவுகூரத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details