மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தி பரப்புரையை தொடங்கினார், அப்போதே சோனியா இன்னும் ஏன் பரப்புரையை தொடங்கவில்லை என்று கேள்விகள் எழுந்தன.
ஹரியானாவில் நடக்கவிருந்த சோனியா காந்தியின் பரப்புரை ரத்து! - சோனியா காந்தி ஹரியானாவில் இன்று பரப்புரை
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று ஹரியானாவில் பரப்புரை மேற்கொள்ளவதாக இருந்த நிலையில், பரப்புரை ரத்து செய்யப்பட்டது.
![ஹரியானாவில் நடக்கவிருந்த சோனியா காந்தியின் பரப்புரை ரத்து!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4787439-thumbnail-3x2-sonia.jpg)
sonia gandhi
இந்நிலையில், இன்று ஹரியானா மாநிலத்தில் நடக்கவிருந்த சோனியா காந்தியின் பரப்புரை ரத்து செய்யப்பட்டது. சோனியாவிற்கு பதிலாக ராகுல் காந்தி அங்கு பரப்புரை மேற்கொள்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சோனியாவை பின்னுக்குத் தள்ளிய ராகுல்!
Last Updated : Oct 18, 2019, 10:52 AM IST