தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சோனியா காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்! - காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று

டெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

Congress Lok Sabha MPs meeting today

By

Published : Nov 20, 2019, 7:54 AM IST

நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கி வரும் டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் தேசியக் குடியுரிமை மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இந்தக் குளிர் காலக் கூட்டத்தொடரை எவ்வாறு கையாள்வது, எந்த மாதிரியான திட்டங்கள் தேவை என்பதெல்லாம் குறித்து ஆலோசிக்க இன்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் காலை நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கவுள்ளார்.

இதற்கிடையே சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டுவந்த எஸ்.பி.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்துக் காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக நாடாளுமன்றத்துக்கு முன் போராட்டமும் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: ஹிட்லரின் சகோதரி கிரண் பேடி -நாராயணசாமி தாக்கு

ABOUT THE AUTHOR

...view details