தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் சோனியா, ராகுல் பங்கேற்பது சந்தேகம்!

டெல்லி : மருத்துவ சிகிச்சைகளுக்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரும் அமெரிக்கா சென்றுள்ளதால் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் சில நாள்கள் இருவரும் பங்கேற்க மாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Sonia, Rahul to miss Monsoon Session
Sonia, Rahul to miss Monsoon Session

By

Published : Sep 13, 2020, 12:15 PM IST

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை (செப்.14) முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை 18 நாள்கள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, வழக்கமான மருத்துவ சோதனைகளை மேற்கொள்ள அமெரிக்கா சென்றுள்ளதால், நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் இரண்டு வாராங்கள் அவரால் கலந்துகொள்ள முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

சோனியா காந்தியுடன் ராகுல் காந்தியும் அமெரிக்கா சென்றுள்ளதால் அவரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முதல் சில வாரங்கள் கலந்துகொள்ள மாட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அவரது சகோதரி பிரியங்கா காந்தி அமெரிக்காவுக்கு வந்தவுடன், ராகுல் முதலில் இந்தியா திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இல்லாத நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீட் தேர்வு, இந்தியா - சீனா மோதல், இந்தியப் பொருளாதாரம், கோவிட் -19 தொற்று உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து எந்த மாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன், ராகுல் காந்தி கடைசியாக வெள்ளிக்கிழமை (செப்.11) பாதுகாப்புத் துறையின் நாடாளுமன்றக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details