தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இ.ஐ.ஏ - 2020 வரைவை திரும்பப் பெற வேண்டும் - சோனியா, ராகுல் வலியுறுத்தல் - சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை-2020

டெல்லி : நாட்டின் சுற்றுசூழல் விதிகளையே அழிக்கும் வகையில் உள்ள செயல் திட்டங்களைக் கொண்ட இ.ஐ.ஏ 2020 வரைவு அறிக்கையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

EIA
EIA

By

Published : Aug 13, 2020, 3:38 PM IST

இ.ஐ.ஏ எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை - 2020ஐ மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரானா சோனியா காந்தி இ.ஐ.ஏவை கடுமையாகச் சாடும் விதமாக சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், நாட்டின் சுற்றுச்சூழல் விதிகளை களேபரம் செய்யும் வேலையை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். இ.ஐ.ஏ. வரைவறிக்கையை திரும்பப் பெற்று, இந்த விவகாரம் தொடர்பாக மக்களிடம் விரிவாக கலந்தாலோசிக்க வேண்டும்.

உலக வெப்பமயமாதல், பெருந்தொற்று போன்ற விவகாரங்களிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றும் விதமாக அரசின் கொள்கை முடிவுகள் இருக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துகிறேன் எனக் கூறி சுற்றுசூழலையும் மக்களின் உரிமைகளையும் நாசப்படுத்தக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

இதேக் கருத்தை வலியுறுத்தும் விதமாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னதாகப் பதிவிட்டிருந்தார். அதில், இயற்கையை நாம் பாதுகாத்தால், அது நம்மை பாதுகாக்கும். எனவே, அரசு இதுபோன்ற சீர்கேடு நடவடிக்கைகளைக் கைவிட்டு வரைவை திரும்பப் பெற வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:'டிவி விவாதமே ராஜீவ் தியாகியின் உயிரைக் குடித்தது' - காங்கிரஸ் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details