முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவின் நூற்றாண்டு விழாவை, ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கமிட்டியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அமரர் நரசிம்ம ராவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் என்பது நாட்டிற்காக உழைத்த மிக அறிவார்ந்த ஆளுமையை நினைவுகூர்ந்து, அவரது உழைப்பிற்கு நன்றி செலுத்த நமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகும்.
அவர் மாநில மற்றும் தேசிய அரசியலில் நீண்ட கால கடும் உழைப்பை செலுத்தி அனுபவம் பெற்றத் தலைவராவார்.
கடுமையான பொருளாதார நெருக்கடியை தேசம் எதிர்க்கொண்டபோது அவர் இந்தியாவின் பிரதமரானார். அவரது தைரியமான தலைமையின் மூலம், நம் நாடு பல சவால்களை வெற்றிகரமாக சமாளிக்க முடிந்தது. ஜூலை 24, 1991 ஆம் தேதி மத்திய பட்ஜெட், நமது நாட்டின் பொருளாதாரத்தையே மாற்றியமைத்தது. ராவின் பதவிக்காலம் பல அரசியல், சமூக மற்றும் வெளியுறவுக் கொள்கை சாதனைகளால் குறிக்கப்படுகிறது என்றால் மிகையல்ல. அவர் ஒரு அப்பழுக்கற்ற காங்கிரஸ்காரர். இந்த ஆண்டு முழுவதும் அவரைப் போற்றும் வகையில் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ததற்காக தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டியை நான் வாழ்த்துகிறேன். பி.வி. நரசிம்மராவ் மிகவும் மதிப்பிற்குரிய தேசிய மற்றும் சர்வதேச பிரமுகர். காங்கிரஸ் கட்சி அவரது பல சாதனைகள் மற்றும் பங்களிப்புகளில் பெருமை கொள்கிறது" என தெரிவித்தார்.
நரசிம்ம ராவின் நூற்றாண்டு விழாவை குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள குறிப்பில், "நவீன இந்தியாவை வடிவமைத்த ஒரு மனிதரை, அவரது உழைப்பை நாம் கொண்டாட உள்ளோம். அவரது பால்ய வயதில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததில் இருந்து மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதமராகும் வரை அவரது அரசியல் பயணம் நாட்டிற்கு பல விடயங்களை எடுத்துரைக்கிறது. அவரது மன உறுதியையும் உறுதியையும் அந்த பயணம் பிரதிபலிக்கிறது.
ஜூலை 24, 1991 வரவுசெலவுத் திட்டத்தின் 29ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இந்த நாளில், இந்தியா பொருளாதார மாற்றத்திற்கான ஒரு தைரியமான புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தது. தாராளமயமாக்கல் சகாப்தத்தை முன்னெடுத்ததில் ராவ் மற்றும் டாக்டர் மன்மோகன் சிங் முக்கிய பங்கு வகித்தனர் என்பதை நாட்டிற்கு நினைவுக் கூறும்.