தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? - ராகுல் காந்தி

டெல்லியில் ஜி23 என்று அழைக்கப்படும் காங்கிரசின் மூத்த அதிருப்தித் தலைவர்களும் இடைக்கால கட்சித் தலைவர் சோனியா காந்தியும் இன்று (டிச. 19) அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்திக்கின்றனர்.

sonia
sonia

By

Published : Dec 19, 2020, 10:01 AM IST

Updated : Dec 19, 2020, 10:25 AM IST

டெல்லி: டெல்லியில் ஜி23 என்று அழைக்கப்படும் காங்கிரசின் மூத்த அதிருப்தி தலைவர்களுக்கும் இடைக்கால கட்சித் தலைவர் சோனியா காந்திக்கும் இடையிலான முக்கியச் சந்திப்பு இன்று (டிச. 19) 10 மணிக்கு நடைபெறுகிறதுது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோரைத் தவிர, ஏ.கே. ஆண்டனி, ப. சிதம்பரம், குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சஷி தரூர், பூபிந்தர் ஹூடா, பிருத்வி ராஜ் சவுகான் உள்ளிட்ட பல மூத்தத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 23 மூத்தத் தலைவர்கள் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு ஒரு கடிதத்தை அனுப்பினர். அதில், கட்சியின் நிரந்தரத் தலைவரை நியமிப்பது உள்பட பல முக்கியச் சீர்திருத்தங்கள் குறித்து அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தக் கடிதத்தால் கட்சிக்குள்ளே பெரும் பரபரப்பும், நெருக்கடியும் உண்டானது. இதனைச் சரிசெய்ய மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் கட்சி பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் முன்னதாக சோனியா காந்தியை டிசம்பர் 8ஆம் தேதி சந்தித்தார்.

இந்தக் கடிதத்திற்கு பிறகு மூத்தத் தலைவர்களுடன் நடைபெறும் முதல் சந்திப்பு இதுவாகும்.

Last Updated : Dec 19, 2020, 10:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details