தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சீக்கிய குருத்வாரா தாக்குதல்: சோனியா காந்தி கண்டனம் - சீக்கிய குருத்வாரா தாக்குதல்

டெல்லி: பாகிஸ்தானில் உள்ள நங்கானா சாகிப் சீக்கிய குருத்வாரா மீது இஸ்லாமியர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Sonia Gandhi condemns Nankana Sahib attack
Sonia Gandhi condemns Nankana Sahib attack

By

Published : Jan 5, 2020, 9:23 AM IST

பாகிஸ்தானில் உள்ள நங்கானா சாகிப் சீக்கிய குருத்வாரா மீது வெள்ளிக்கிழமை (ஜன. 3) இஸ்லாமியர்கள் சிலர் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவம் நடந்து 24 மணி நேரம் முடிவதற்குள் காங்கிரசின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு மத்திய அரசு பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பாகிஸ்தான் நங்கானா சீக்கிய குருத்வாரா மீது தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு என் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சீக்கிய யாத்ரீகர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை நினைத்து கவலைக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அலுவலர்களுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மத்திய அரசு அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

மேலும் வருங்காலங்களில் புனிதத் தலங்கள் மீது தாக்குதல் நடைபெறாத வகையில் பாதுகாப்புக்கு உறுதி செய்ய வேண்டும். குருத்வாரா மீது தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய இந்திய அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பாகிஸ்தானில் சீக்கிய புனிதத் தலத்தின் மீது தாக்குதல்!

ABOUT THE AUTHOR

...view details