தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சோனியா காந்தி பிறந்த நாள்: தங்கத் தேர் இழுத்து நாராயணசாமி வழிபாடு - Congress President Sonia birthday

புதுச்சேரி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் நாராயணசாமி மணக்குள விநாயகர் கோயிலில் தங்கத்தேர் இழுத்து சாமி தரிசனம் செய்தார்.

புதுச்சேரி
புதுச்சேரி

By

Published : Dec 9, 2020, 11:37 AM IST

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 74ஆவது பிறந்த நாள் இன்று. அவரது பிறந்த நாளையொட்டி நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

மணக்குள விநாயகர் கோயிலில் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சித் தலைவர் சுப்பிரமணியம், அமைச்சர் கந்தசாமி, கட்சி நிர்வாகிகள், அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலை வைத்து தங்கத்தேர் இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

தங்கத் தேர் இழுத்து நாராயணசாமி வழிபாடு

தொடர்ந்து வழிபாட்டு இடங்களில் சிறப்பு பூஜைகள் செய்து கொண்டாடப்பட்டது. மேலும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:கரோனா மருந்து செலவை மத்திய அரசே ஏற்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம்

ABOUT THE AUTHOR

...view details