நாடு முழுவதிலும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து ராகுல் காந்தி, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். எனினும் இதை காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளாமல் இருந்த நிலையில் கடந்த வாரம் அப்பதவியில் இருந்து விலகினார்.
மக்களவை கொறடாவாக மாணிக்கம் தாகூர் நியமனம்! - மக்களவை கொறடா
டெல்லி: மாணிக்கம் தாகூரை மக்களவை கொறடாவாக நியமனம் செய்து காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுத் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
manicka tagore
இந்நிலையில், மக்களவை காங்கிரஸ் கொறடாவாக விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூரை நியமனம் செய்து காங்கிரஸ் நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழுத் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
Last Updated : Jul 11, 2019, 11:41 AM IST