தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஓய்வெடுக்க சென்னை வருகிறாரா சோனியா? - காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாள்பட்ட மார்புத் தொற்றினால் அவதிப்பட்டுவருகிறார். இந்நிலையில் அவர் டெல்லியிலிருந்து வெளியேற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், சென்னை அல்லது கோவாவில் சில நாள்கள் அவர் தங்கி ஓய்வெடுக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Congress president Sonia Gandhi heavy pollution Delhi's pollution Sonia Gandhi chest infection Sonia Gandhi advised to briefly shift out of Delhi காற்று மாசுபாடு சோனியா காந்தி காங்கிரஸ் மார்புத் தொற்று
Congress president Sonia Gandhi heavy pollution Delhi's pollution Sonia Gandhi chest infection Sonia Gandhi advised to briefly shift out of Delhi காற்று மாசுபாடு சோனியா காந்தி காங்கிரஸ் மார்புத் தொற்று

By

Published : Nov 20, 2020, 2:09 PM IST

Updated : Nov 20, 2020, 5:02 PM IST

டெல்லி: தேசிய தலைநகரில் அதீத காற்று மாசுபாடு நிலவும் நிலையில், டெல்லியிலிருந்து வெளியேற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாள்பட்ட மார்புத் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருகிறார். டெல்லியில் காற்று மாசுபாடு கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், அவர் உடனடியாக டெல்லியில் இருந்து வெளியேறி வேறு இடத்தில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், சோனியா காந்தி அடுத்த சில நாள்கள் சென்னை அல்லது கோவாவில் தங்கி ஓய்வெடுப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக ஜூலை 30ஆம் தேதி, சர் கங்கா ராம் மருத்துவமனையில் உடல்நலக் கோளாறு காரணமாக சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். தீபாவளி பண்டிகைக்கு பின்னர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மீளுமா காங்கிரஸ் - ஓர் அலசல்

Last Updated : Nov 20, 2020, 5:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details