உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்தரா பகுதி கடந்த சில நாள்களுக்கு முன்னர்தான் பரபரப்புக்குள்ளானது. அங்குள்ள சுரங்கம் ஒன்றில் மூன்றாயிரம் டன் அளிவிற்கு தங்கம் இருப்பதாகச் செய்தி வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை வதந்தி என ஜி.எஸ்.ஐ. அமைப்பு விளக்கம் தந்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், இப்போது புதிய பரபரப்பு அங்கு அரங்கேறியுள்ளது. அங்குள்ள சோன் பாஹ்ரி என்ற பகுதியைச் சுற்றி பழங்குடி மக்கள் பலர் வசித்துவருகின்றனர். அவர்கள் பிரதமரின் இலவச மின் இணைப்புத் திட்டத்தில் தங்கள் இல்லத்திற்கு மின் இணைப்பைப் பெற்றனர்.
புதிதாக மின் இணைப்பைப் பெற்று மின்சாரத்தை உபயோகப்படுத்தும் அவர்களுக்கு அதிர்ச்சி தரும்விதமான மின்கட்டணத்தை மின்சார வாரியம் அவர்களுக்குத் தந்துள்ளது.