உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டம், சோந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் ஸ்வரூப். இவருக்கு நவீன், மனோஜ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
குறட்டை விட்டதற்காக தந்தையைக் கொலை செய்த மகன் கைது! - son killed father for snoring
லக்னோ : உறங்கிக் கொண்டிருந்த தனது தந்தை குறட்டை விட்டதால் ஆத்திரமடைந்த மகன், தந்தையைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று (ஆக. 12) ராம் ஸ்வரூப் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, தந்தையின் குறட்டை சத்ததால் ஆத்திரமடைந்த நவீன், தனது தந்தையை அடித்துக் கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், ராமை அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்தவிட்டதாக அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் ராமின் மற்றொரு மகனான மனோஜ் வீட்டில் இல்லாத சமயத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மனோஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், நவீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.