புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரின் மகன் ரஞ்சித். இவர் பிரான்ஸ் நாட்டில் வசித்துவந்தார். இவர் சமீபத்தில் விடுமுறைக்காக புதுச்சேரியில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இங்கு வந்த இடத்தில் அடிக்கடி தந்தைக்கும் மகனுக்கும் சொத்து பிரச்னைகள் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.
சொத்துத் தகராறில் மகனை வெட்டிப் படுகொலை செய்த தந்தை - father killed his own son at puducherry
புதுச்சேரி: பிரான்ஸிலிருந்து வந்த மகனைச் சொத்துத் தகராறு காரணமாக அவரது தந்தையே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெட்டிக் கொலை செய்த தந்தை
இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் தந்தை மகனுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறில் குமார் தனது மகன் ரஞ்சித்தைக் கொடூரமாக வெட்டிக்கொலை செய்துள்ளார். இதில், சம்பவ இடத்திலே பரிதாபாமாக துடிதுடித்து ரஞ்சித் உயிரிழந்தார். இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அரியாங்குப்பம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவியின் கழுத்தறுத்துக் கொலைசெய்த கணவன் கைது