தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பணம் கொடுத்து கரோனாவால் இறந்த தந்தையின் முகத்தைப் பார்த்த மகன்!

கொல்கத்தா : 2,500 ரூபாய் பணம் கொடுத்து தனது இறந்த தந்தையின் முகத்தை மகன் பார்த்த சம்பவம் மேற்கு வங்கத்தில் அரங்கேறியுள்ளது.

father dead
father dead

By

Published : Aug 11, 2020, 5:34 PM IST

உலக அளவில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 31ஆம் தேதி வரை அமலில் உள்ளது.

இந்நிலையில், கரோனா பாதிப்பால் உயிரிழந்த தனது தந்தையின் உடலை, மகன் இரண்டாயிரத்து 500 ரூபாய் பணம் கொடுத்து பார்த்த வேதனையான சம்பவம் மேற்கு வங்கத்தில் அரங்கேறியுள்ளது.

மேற்கு வங்கம் மாநிலம், ஹவுராவைச் சேர்ந்த 52 வயது நபர் ஒருவர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து, சிகிச்சைப் பலனின்றி அந்நபர் உயிரிழந்த நிலையில், அவர் இறந்து பல மணிநேரம் ஆகியும் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.

தொடர்ந்து, 12 மணி நேரத்திற்குப் பிறகு அவரின் இறப்புச் செய்தியை அவரதுமகன் உள்ளிட்ட குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அந்நபரை பார்க்க மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். ஆனால் அங்கிருந்து அவரது உடல் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், சுடுகாட்டிற்குச் சென்று அவரது உடலைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

ஆனால், இறந்த தந்தையின் முகத்தைப் பார்க்கவும், இந்திய முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யவும் 51,000 ரூபாய் வழங்க வேண்டும் எனக் கூறி அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 2,500 பணத்தைக் கொடுத்து தனது இறந்த தந்தையின் முகத்தை அம்மகன் பார்த்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே வேதனையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details