அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு இரண்டு தேதிகளை ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை பரிந்துரைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை ஆகஸ்ட் 3 அல்லது 5ஆம் தேதிகளில் அடிக்கல் நாட்டுமாறு அறக்கட்டளை அழைத்திருந்தது.
கோயில் கட்டினால் கரோனா ஒழியுமா? - சரத் பவார் - தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார்
மும்பை: கோயில் கட்டுவது கரோனா தொற்று நோயை ஒழிக்க உதவும் என்று சிலர் நினைக்கிறார்கள் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், "கரோனாவை ஒழிப்பது மகாராஷ்டிரா அரசாங்கத்தின் முன்னுரிமை, ஆனால் சிலர் கோயில் கட்டுவது கரோனாவை தணிக்க உதவும் என்று சிலர் நினைக்கிறார்கள்.
மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதும், அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதும் சேனா தலைமையிலான மாநில அரசின் முன்னுரிமைகள். இது 'ராம்ராஜ்யா' (நீதி மற்றும் உண்மையின் விதி) என்ற கருத்தாகும். மகாராஷ்டிராவில் கரோனா வைரஸுக்கு எதிரான எங்கள் (மாநில அரசின்) போராட்டத்தில் இதை நாங்கள் துல்லியமாக செய்கிறோம்," என்று அவர் கூறினார்.