தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவை பிரிக்க முயலும் அந்நிய சக்திகள் - பகீர் கிளப்பும் பாபா

டெல்லி: நாட்டில் பிளவை ஏற்படுத்தவே அந்நிய சக்திகளால் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுவதாக யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Yoga guru Ramdev
Yoga guru Ramdev

By

Published : Jan 24, 2020, 7:14 PM IST

டெல்லியில் இன்று நடைபெற்ற சம்வத் 2020 என்ற நிகழ்ச்சியில் யோகா மாஸ்டரும் பதஞ்சலி நிறுவனத்தின் தலைவருமான பாபா ராம்தேவ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "இந்தியர்களின் குடியுரிமையை யாராலும் பறிக்க முடியாது. இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்கள் மத்தியில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுவருகிறது. இது தவறான செயல்.

உள்நாட்டில் இயங்கும் சில சக்திகளும் சில அந்நிய நாட்டு சக்திகளும் நம் நாட்டில் பிளவை ஏற்படுத்த முயல்கின்றனர். மக்கள் மிகுந்த உணர்ச்சிவயப்பட்ட நிலையிலுள்ளதால், அதை பயன்படுத்தி மக்களிடையே தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன" என்றார்.


இதையும் படிங்க: இந்தியாவில் குட்டி பாகிஸ்தான் உருவாகிறதா? - பாஜக வேட்பாளரின் சர்ச்சை பேச்
சு

ABOUT THE AUTHOR

...view details