ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் குப்புவாரா மாவட்டத்திற்குட்பட்ட மச்சில் பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.
பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் - இந்திய ராணுவ வீரர் பலி
ஸ்ரீநகர்: குப்புவாரா மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியை ஒட்டிய பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Soldier
அதில் இந்திய ராணுவத்தின் ராஷ்ட்ரியா ரைப்பில்ஸ் பிரிவைச் சேர்ந்த வீரர் ராஜேந்தர் சிங் என்பவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். எனினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.