தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியம் - பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

பாகிஸ்தான் ராணுவம்
பாகிஸ்தான் ராணுவம்

By

Published : Jun 5, 2020, 3:19 PM IST

கடந்த ஒரு வார காலமாகவே நாட்டின் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவிவருகிறது. குறிப்பாக, எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவருகிறது. காஷ்மீர் ரஜௌரி பகுதிக்குள் முன்னேறி வந்த பாகிஸ்தான் ராணுவம் கடும் தாக்குதலை மேற்கொண்டது.

அப்போது, இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் வீர மரணம் அடைந்தார். சுந்தர்பானி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவருகிறது. இதற்கு, இந்திய ராணுவம் சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுவருகிறது. ஏற்கனவே, லடாக் பகுதியில் சீனா தனது ராணுவ வீரர்களை குவித்துவருகிறது.

இதனால், போர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போருக்கு தயாராக இருங்கள் என, சீன அதிபர் ஜி ஜின்பிங் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், இந்த பதற்றமான சூழல் உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது.

இதையும் படிங்க: 'சீனப் பொருள்களை நிராகரிப்போம்'- பொதுமக்களிடம் சி.ஆர்.பி.எஃப். வீரர் வேண்டுகோள்!

ABOUT THE AUTHOR

...view details