தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சூரிய சக்தி எனும் தீராத புதையல்..!

2030 க்குள் தூய்மையான எரிசக்தி உற்பத்திக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், எண்ணெய் இறக்குமதியை 10% குறைப்பதன் மூலமும் சுற்றுச்சூழலை வளப்படுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசுக்கு இனிமையான செய்தி ஒன்று உள்ளது. புதிய ஆராய்ச்சி ஆய்வுகள் நாட்டின் முக்கிய நீர்த்தேக்க மேற்பரப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் 280 ஜிகாவாட்ஸ்-ஐ உருவாக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது.

By

Published : Feb 24, 2020, 7:04 PM IST

solar power - Infinite Treasure
solar power - Infinite Treasure

சூரிய சக்தி, எரிசக்தி பகிர்மான ஆணையத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் எரிசக்தி வள ஆணையம், இந்தியாவில் 18,000 சதுர கி.மீ பரப்பளவில் பரவியிருக்கும் நீர்த்தேக்க மேற்பரப்புகளை சூரிய ஆற்றல் சுரங்கங்கள் என்று குறிப்பிடுகிறது. ஒன்பது மாதங்களுக்கு முன்னர் சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2022ஆம் ஆண்டில் 100 ஜிகாவாட் சூரியசக்தியை அடைய இலக்கு நிர்ணயித்துள்ள இந்தியா ஏற்கனவே 175 ஜிகாவாட் உற்பத்தி செய்து முன்னேறி வருவதாக பாராட்டியது. நீர் மேற்பரப்பில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்வதால், எதிர்காலத்தில் மேலும் பல புதிய நம்பிக்கைகள் பிரகாசமாக இருக்கும். புதைபடிவ எரிபொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் அழிவில் ஈடுபட்டுள்ள பல நாடுகள், பல ஆண்டுகளாக மாற்று எரிசக்தி ஆதாரங்களைத் தேடுகின்றன. புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் செயல்திறனை அதிகரிக்கும் பணியில், பத்தாண்டுகளுக்கு முன்னர் கலிபோர்னியாவில் (புளோட்டோ ஓல்டாயிக்) மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டம் அமைக்கப்பட்டது. படிப்படியாக, இது மற்ற நாடுகளுக்கும் பரவியது. அமெரிக்காவின் மொத்த மின்சார விநியோகத்தில் 10

விழுக்காடு நீர்த்தேக்கங்களில் உற்பத்தி செய்யப்படுவதாக உலக வங்கி சமீபத்தில் மதிப்பிட்டுள்ளது. உலகளவில் 400 ஜிகாவாட் வரை உற்பத்தி படிப்படியாக எட்டக்கூடும் என்று ஏற்கனவே கணிப்புகள் செய்யப்பட்டன. இதில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவின் நீர்த்தேக்கங்களில் உருவாக்கப்படலாம் என்று பல்வேறு ஆய்வு அறிக்கைகள் வெளிப்படுத்தியிருப்பது பல வாய்ப்புகளையும் சாத்தியங்களையும் உருவாகியுள்ளது!

கிரேட்டர் ஹைதராபாத்தில் கட்டட மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தியில் தீவிரமாக செயல்படுத்தப்படும் அம்சங்கள் மாற்று எரிசக்தி ஆதாரங்களில் மக்கள் புதிய விழிப்புணர்வைக் குறிக்கின்றன. வீடுகள், குடியிருப்புகள் மற்றும் சமூக குடியிருப்புகளில் சோலார் பேனல்களை நிறுவுவதற்கான விலைகள் மற்றும் சலுகைகளை இந்த மையம் சமீபத்தில் இறுதி செய்துள்ளது. பல்கலைக்கழகங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ரயில்வேயில் சூரிய மின் உற்பத்தியின் வெற்றிக் கதைகளை நாம் அடிக்கடி கேட்கிறோம். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தின் வதோதராவில் ஒரு நீர் கால்வாயில் 10 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் கட்டப்பட்டது ஒரு முக்கிய செய்தியானது. பொதுவாக, நிலத்தில் இதுபோன்ற ஒரு திட்டத்திற்கு சுமார் 50 ஆயிரம் ஏக்கர் கையகப்படுத்தல் தேவைப்படுகிறது. நிலம் கையகப்படுத்துதலில் சிக்கல் இல்லாமை மற்றும் நீர் ஆவியாதலை கட்டுப்படுத்துவது என்ற இரட்டை நன்மைகள் கால்வாயின் கட்டுமானத்தில் உள்ளன. ஜெர்மனி போன்ற நாடுகளில், இத்தகைய திட்டங்களுக்கு 10-15 விழுக்காடு அதிகம் செலவாகும். ஆனால், வல்லுநர்கள் நீண்ட கால நன்மைகளை கருத்தில் கொண்டு அதிகமாகும் செலவு மிகக் குறைவு என்று கருதுகின்றனர். விசாகப்பட்டினத்தின் முடசர்லோவா மற்றும் மேக்திரிகடா நீர்த்தேக்கங்களில் இரும்பிலான மிதக்கும் சூரிய மின் திட்டங்களுக்கு பதிலாக அலுமினியத்தைப் பயன்படுத்துவது நல்ல பலனைத் தந்துள்ளது. சோலார் பேனல்கள் ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் நிறுவப்பட்டன, மேலும் நீர்மட்டம் அதிகரித்தாலும் குறைந்தாலும் எந்தப் பிரச்சினையும் ஏற்பட கூடாது என்பதில் கவனமாக இருந்தது. சுமார் 120 நாடுகளின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய சர்வதேச சூரிய கூட்டணியை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி திறந்து வைத்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த அமைப்பின் சேவைகளும், நீர்த்தேக்கங்களில் சூரிய மின்சாரம் தயாரிப்பதில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள நாடுகளின் அனுபவங்களும் கோரப்பட்டால், சூரிய சக்தி உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகிக்க முடியும். தவறுக்குள்ளாகாத உத்திகள் மற்றும் நிறுவன உள்கட்டமைப்புடன் நடவடிக்கைகளைத் தொடங்க இது ஒரு சரியான நேரம்.

சூரிய மின்சக்தி துறையில் பெரும் முன்னேற்றம் கண்டுகொண்டிருக்கும் சீனா, மத்திய யினன் நகரத்திற்கு அருகே இடிந்து விழுந்த நிலக்கரி சுரங்கத்தில் செயற்கை ஏரியை உருவாக்கி, மொத்தம் 66 லட்சம் பேனல்களுடன் 40 மெகாவாட் உற்பத்தி செய்கிறது. அறுபதுக்கும் மேற்பட்ட நீர்த்தேக்கங்களில் சூரிய திட்டங்களை நிர்மாணிப்பதில் ஜப்பானுக்கு தனித்துவமான வேறுபாடு உள்ளது. இந்தோனேசியா, சிலி, தைவான் மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் சூரிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு புதிய இடங்களாக உருவாகி வருகின்றன. இந்த நாடுகளை விட இந்தியாவுக்கு இயற்கையான நன்மை உண்டு. புவியியல் ரீதியாக நமக்கு ஒரு முக்கிய சாதகமான அம்சம் உள்ளது. உலகில், கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையில் ஒரு வருடத்தில் 300 நாட்களுக்கு மேல் சூரிய ஒளி கிடைக்கும். இந்த அட்சரேகைகளுக்கு இடையில் அமைந்துள்ள நாடுகளில் இந்தியாவும் உள்ளது. இது நிச்சயமாக, கிடைக்கப்பெறாத வரம். நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு எப்போதும் சுற்றி வருகிறது. அவற்றின் இருப்பு குறைந்துவிட்டால், மின் உற்பத்தி நிறுத்தப்படும். சூரிய ஒளி அப்படியல்ல, அது எல்லையற்ற புதையல். விவசாய பண்ணைகளில் சோலார் பேனல்களை நிறுவுவதன் மூலம் சூரிய சக்தியை அதிகரிக்க முடியும் என்பது முன்னர் நிரூபிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்களில் சூரிய திட்டங்களுக்கு முன்னுரிமை தருவதன் மூலம் பல மரங்களை வெட்டுவதைத் தடுக்கலாம். நீர் மேற்பரப்பில் சோலார் பேனல்களை வைப்பதன் மூலம், நீர் சுத்திகரிப்புக்கான செலவும் மிச்சமாகும். சமீபத்திய எரிசக்தி வள முகமை அறிக்கை இந்த உண்மையை உறுதிப்படுத்தியுள்ளது. ஜெர்மனி தனது உள்நாட்டு தேவைகளில் 85 விழுக்காடு சூரிய மற்றும் காற்றாலை சக்தியைப் பயன்படுத்துகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் எதிர்காலத்தில் இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட திறனில் 10% சூரியசக்தியை உற்பத்தி செய்தால், அது நாட்டின் மின் துறைக்கு ஒரு புதிய விடியலாக இருக்கும்.

ABOUT THE AUTHOR

...view details