ஆந்திரப்பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனில். இவர், ஹைதராபாத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றிவந்தார். அலுவலகப் பணி செல்ல ஏதுவாக சுனில், தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கிஸ்மத்பூர் ஓம் நகரில் தனது மனைவியுடன் வசித்துவந்தார். தனது சுய தேவைகளுக்காக சில ஆன்லைன் செயலிகள் மூலம் சுனில் அதிகளவில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
கடல் தொல்லையால் விபரீத முடிவு
நாளடையில் கடனின் வட்டி விகிதம் அதிகரித்துக்கொண்ட வந்ததால், கடனைத் திரும்பச் செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கடன் நெருக்கடியில் மனஉளைச்சலில் சுனில் இருந்தவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.