கேள்வி : நாம் யாரையாவது தொலைபேசியில் தொடர்புகொள்ள முற்படும்போது ஒரு உரையாடல் நமக்கு கேட்கும் அதில் நாம் கோவிட்-19 வைரஸை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக நாம் செயல்படக் கூடாது என்றும் அறிவுறுத்துகின்றனர். உண்மையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை, அவர்களுக்கு மருத்துவ சேவை செய்தவர்களை பொது சமூகம் பாராபட்சமாக நடத்துவது குறித்து நாம் வெளிப்படையாகவே பேசுவோமா ?
பதில் : நமக்கு கிடைத்துள்ள ஒரு தகவலின் படி குடியிருப்புப் பகுதிகளில் இருப்பவர்கள், மற்ற வீடுகளில் யாராவது இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை ஒருவகையான தீண்டாமையோடு அணுகுகின்றனர். அவர்களை சொந்த குடியிருப்பிற்குள்ளேயே அனுமதிக்க தயங்குகின்றனர். எடுத்துக்காட்டிற்கு, ஒரு பெண் மருத்துவர் அவருடைய வீட்டிற்குள் நுழைய அக்கம் பக்கத்தினர் அனுமதி மறுத்தனர். ஏனென்றால், அவர் பணிபுரியும் இடத்தின் மூலமாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தாங்கள் அச்சப்படுவதாக கூறியுள்ளனர்.
மேலும், கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வந்த ஒரு ஆண் மருத்துவருக்கு கோவிட்-19 தொற்றுநோய் உறுதி செய்யப்பட்ட பிறகு தனிமைப்படுத்தப்படுகிறார். அவரது குடியிருப்பு பகுதியும் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டது. இதனால், அவர்கள் கோபம் கொண்டதாக அறிய முடிகிறது. தன்னால் மற்றவர்களும் பாதிப்பிற்குள்ளானதாக எண்ணி அந்த மருத்துவர் மிகுந்த துன்பத்திற்குள்ளாகி உள்ளார். அதை எண்ணி அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதையும் தாண்டி ஒரு கசப்பான சம்பவம் நடந்துள்ளது. அது என்னவென்றால் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திய சிலர், அந்த முடிவுகள் வருவதற்கு முன்பே தலைமறைவாகினர். சிலர் ஒருவேளை தங்களுக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பதாக முடிவுவந்துவிட்டால் என்ன செய்வதென்ற அச்சத்தில் உச்சக்கட்டமாக 'தற்கொலை' முடிவை எடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் நோயை கண்டு அச்சப்படுவதைவிட தங்களை சுற்றியுள்ள மனிதர்களை கண்டு அச்சப்படுகின்றனர் என்பதே ஒரு கசப்பான உண்மையாகும்.
கேள்வி : உங்களைப் பொறுத்தவரையில் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களிடம் இவ்வாறு பிறர் நடந்து கொள்வதற்கான காரணம் தான் என்ன ?
பதில் : எப்போதெல்லாம் இது போன்ற ஒரு நோய் பரவும் நிலை உருவாகிறதோ... அப்போதெல்லாம் மனிதர்கள் இவ்வாறு நடந்துகொள்கின்றனர். இதில், படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வித்தியாசம் இல்லை. இவை அவர்களுடைய அறியாமையை வெளிப்படுத்துகின்றன என்றே சொல்லலாம். இந்த சமூகத்தில் நிலவும் அறியாமையும், அவர்களுடைய அறியாமையும் அவர்களுக்குள் பயத்தை ஏற்படுத்திவிடுகிறது. அந்த பயமானது மக்களுக்கு இடையே பாகுபாடு கொண்டு வருகின்றது.