கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான நேற்று (செப்.16) மாநிலங்களவையின் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி பதிலளித்தார்.
அதில், " ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பிகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகள் மிகத் தீவிரமாக இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை தகவல் அளித்துள்ளது.
தீவிரவாத செயல்பாடுகளுக்கு ஆதரவை திரட்டும் வகையில் பரப்புரை செய்ய சமூக ஊடகத் தளங்களை பயன்படுத்துவதால், அவை தொடர்ந்து கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளன. தீவிரமாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு முடிவெடுத்து, அதற்குரிய பணிகளை செய்து வருகிறது.