தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'செய்தியாளர் சந்திப்பு இனி தினமும் கிடையாது?' - ஸ்ட்ரிக்ட் ஆன பினராயி விஜயன் - corona in kerala

திருவனந்தபுரம்: இன்று முதல் தினமும் கேரள அரசு, செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தாது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Pinarayi Vijayan
Pinarayi Vijayan

By

Published : Apr 17, 2020, 11:15 PM IST

எப்போதும் போல நேற்று மாலை 6 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பினராயி விஜயன், அச்சந்திப்பின் முடிவில் ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த தகவலின்படி, இன்று முதல் என்றும்போல தினமும் செய்தியாளார்கள் சந்திப்பு இருக்காது என்றும்; ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே இச்சந்திப்பு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “ஏப்.,20ஆம் தேதிக்குப் பிறகு மாநிலங்களில் ஓரளவு கட்டுப்பாடுகள் உள்ள மாவட்டங்களில் வாகனங்களுக்கான ஒற்றை-இரட்டைப்படை முறை செயல்படுத்தப்படும். மேலும், பெண்கள் இயக்கும் வாகனங்களுக்குச் சலுகை வழங்கப்படும்.

காசர்கோடு, கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு போன்ற அதிகப்பட்ச கரோனா பாதிப்புகள் உள்ள மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு முதல் மண்டலமாக மாறும். இந்த மண்டலத்தில், மே 3ஆம் தேதி வரை எந்தவிதமான தளர்வும் இல்லாமல், ஊரடங்கை கண்டிப்பாகத் தொடர வேண்டும்.

இரண்டாவது மண்டலத்தில், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கொல்லம் ஆகியவை சேர்க்கப்படும். இந்த இரண்டாவது மண்டலத்தில் ஹாட் ஸ்பாட் பகுதிகள் காணப்பட்டு சீல் வைக்கப்படும்.

அதேபோல் ஆலப்புழா, திருவனந்தபுரம், பாலக்காடு, திருச்சூர், வயநாடு ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மூன்றாவது மண்டலத்தில் பகுதியளவு தளர்வு வழங்கப்படும். கொரோனா பாதிப்பே இல்லாத கோட்டயம், இடுக்கி மாவட்டங்கள் நான்காவது மண்டலத்தில் சேர்க்கப்படும். இந்த தளர்வுகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும்” என்றும் கூறியிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details