புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், அவர் மக்களுக்கு சமூக வலைதளத்தில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், "நான்கு ஆண்டுகளை துணைநிலை ஆளுநராக பூர்த்தி செய்துள்ளேன். ஒவ்வொரு நாளும் புதுச்சேரி மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் உயர்ந்த நோக்கத்தை கொண்டிருந்தது. பல சவால்களை சந்தித்து கடந்த நான்கு ஆண்டுகளின் வரலாறே சாட்சி. கரேனா பாதிப்பு அனைத்து நிகழ்வையும் மாற்றியுள்ளது. கலால் துறையில் கணினி மூலம் மதுபான உரிமங்களை ஏலம் விடுவது, தற்போதைய நிதி வருவாய்க்கு தேவையாக உள்ளது. கேபிள் டிவி, சொத்து வரி, மின் நிலுவைத் தொகை ஆகியவற்றில் நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும். பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் உள்ள அரசு இட வாடகை, உரிம கட்டணங்களை மறு சீரமைப்பதில் பரிசீலனை அவசியம் தேவை.