குஜராத் மாநிலம், மஹிசாகர் மாவட்டம், அஜ்வானா கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வத் காலா பாரியா(60). விவசாயியான இவர், நேற்று மாலை லாரியில் சோளக் கதிர்களை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது அதில் மறைந்திருந்த பாம்பு ஒன்று பார்வத்தின் கை, முகத்தில் கடித்தது. இதில் ஆத்திரமடைந்த அவர் பதிலுக்கு பாம்பை கடித்தார். இதில் அந்த பாம்பு சம்பவ இடத்திலேயே பலியானது.
பாம்பை பதம் பார்த்த விவசாயி - முடிவில் இருவரும் பலி - man bite
காந்திநகர்: பாம்பும், விவசாயியும் மாறி மாறிக் கடித்து கொண்டதில் இருவரும் உயிரிழந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது.
snake
பார்வத்தை கடித்த பாம்பு விஷபாம்பு என்பதால், சிறிது நேரத்தில் மயங்கிய அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தன்னை கடித்த பாம்பை பழிவாங்கிய விவசாயியும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.