மக்களவைத் தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ள அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். இந்நிலையில், ஸ்மிருதி இரானிக்கு நெருங்கியவராகக் கருதப்படும் ரவி தத் மிஸ்ரா, காங்கிரஸ் கட்சியில் அக்கட்சியின் கிழக்கு உத்தரப்பிரதேச பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி முன்னிலையில் இணைந்துள்ளார்.
ஸ்மிருதி இரானியின் வலது ‘கை’ காங்கிரஸ் கட்சியில் இணைந்தது! - smriti irani
லக்னோ: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் தீவிர ஆதரவாளராக வலம் வந்த ரவி தத் மிஸ்ரா, இன்று பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
ஸ்மிருதி இரானியின் வலதுகை காங்கிரஸ் கட்சியில் இணைந்தது
ஸ்மிருதி இரானியை அமேதி தொகுதியில் போட்டியிட வலியுறுத்தியவரே ரவி தத் மிஸ்ராதான் எனக் கூறப்படும் நிலையில், இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இவர் சமாஜ்வாதி ஆட்சியில் அமைச்சராகவும் இருந்துள்ளார். 2014ஆம் ஆண்டும் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.