மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்மிருதி இரானிக்கு கரோனா உறுதி!
டெல்லி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Smriti Irani
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு அறிவிப்பை வெளியிடும் நான் வார்த்தையைத் தேடுவது மிக அரிதான ஒன்று. எனக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.